Announcement:
அறிவிப்பு:
In ancient period around 6th century, the place perur were surrounded by pipaltree and hence known to be as pipal forest. The celestial cow (Kamadhenu) and its calf were grazing the calf leg is stuck inside the Termitemound so mother cow kamadhenu hit the hill with his horn to relief calf suddenly blood bleeds out from Termite mound. So people excavated the particularplace and took self existence (Swayambu Moorthi Patteeswarar). Till date we can visualise of foot motfit of calf and horn of the cow on the forehead of Linga statue. So this temple is known by the name Thiruvan Patti Udayar.
Read Moreபேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அருள்மிகு பட்டீசுவரசுவாமி, இறைவி அருள்மிகு பச்சைநாயகியார் இறைவன் தன்னை வேண்டி தவம்புரிந்த காமதேனுவிற்கு காட்சியளித்து அதன் விருப்பத்தை நிறைவேற்றி முக்தி அளித்ததால் பிறவா நெறித்தலம் என்ற பெயர் பெற்றது. திருப்பேரூர் கொங்குநாட்டு வைப்புத் தலங்களுள்ளே பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இது பண்டைக்காலத்தில் அரசவனமாக இருந்தது. இவ்வனத்தில் பெருமானார் புற்றுக்களால் சூழப்பெற்றிருந்தார். படைப்பு தொழிலைச் செய்யும் ஆற்றலைப் பெறவிழைந்த காமதேனு இங்கு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள் தனது கன்றின் கால் புற்றின் உள்ளே அகப்பட்டுக் கொள்ள, அதை எடுப்பதற்காக தன் கொம்புகளால் புற்றைக் குத்தி களைந்தெடுத்த போது கன்றின் கால் சுவடும், தனது கொம்பின் சுவடும் லிங்க ரூபமாக இருந்த இறைவனின் திருமேனியில் பட்டு இரத்தம் வரக்கண்டு வருந்திற்று, இறைவன் அச்சுவடுகளைத் தமக்கு அடையாளமாக விரும்பி ஏற்றுக் கொள்வதாகக் கூறி, காமதேனுவின் விருப்பத்தை கருவூரிலே முற்றுவிக்கச் செய்வதாக அருளினார். காமதேனு தங்கி வழிபட்டதால் திருவான்பட்டியுடையார் என்ற திருப்பெயரோடு, இறைவன் இங்கே வழிபடும் ஆன்மாக்கட்கு முக்தியின்பத்தை அருள் செய்து விளங்குகிறார். இன்றும் இவ்வடையாளங்கள் திருமேனியில் காணப்படுகின்றன.
மேலும் படிக்க