Announcement:
அறிவிப்பு:
The auspicious Lakshmi Narasimha Swamy Temple is located in the heart of Ukkadam, Coimbatore South Circle, Coimbatore District. This temple was built approximately two hundred and fifty years ago by the people of the region and is worshiped as an abominable place. Isthalam is special among the places in Kongu country. A Large number of pilgrims visit the temple on SATURDAYS. This is one of the Prarthanai Sthalam in COIMBATORE. Much people coming from KERALA and interior parts of TAMIL NADU. The specilaity of this temple is holy DEEPAM of ARULMIGU LAKSHMI NARASIMMAR to solve their problems especially marriage and debt problem.
The most important is SWATHI HOMAM, contcted by each and every month at swathi nakshathiram days. On that HOMAM hundreds of people participate and getting blessings. VAIGUNDA EGADASI is very famous urchavam. Thosands of people visit and getting blessings of Lord LAKSHMI NARSIMHAR from morning 5.00 o clock.
LORD HAYAGREEVAR gives his blessings to students. Wednesday is special for dharasanam. Every SUNDAY evening SAHASRANAMA ARCHANAI conducted by temple priests many devotees are participatting in this function. Every MOOLA Nakshatiram day of the month, a special abishegam and homam for LORD ANJANEYAR conduting here with devotees participation.
கோவை மாவட்டம், கோவை தெற்கு வட்டம், உக்கடத்தின் மையப்பகுதியில் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டு அபிமானஸ்தலமாக வழிபட்டு வருகிறது. கொங்கு நாட்டில் உள்ள ஸ்தலங்களில் இஸ்தலம் சிறப்பு வாய்ந்ததாகும்.
சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இது கோயம்பத்தூரில் உள்ள பிரார்த்தனை ஸ்தலங்களில் ஒன்றாகும். கேரளா மற்றும் தமிழகத்தின் உள் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். திருமணம் மற்றும் கடன் பிரச்சனைகளை தீர்க்க அருள்மிகு லட்சுமி நரசிம்மரின் புனித தீபம் ஏற்றுவது இக்கோயிலின் சிறப்பு.
மிக முக்கியமான நிகழ்வு சுவாதி ஹோமம், ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாட்களில் நடத்தப்படுகிறது. அந்த ஹோமத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அருள் பெறுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமான ஊர்ச்சவம். காலை 5.00 மணி முதல் லட்சக்கணக்கான மக்கள் லட்சுமி நரசிம்மரை தரிசித்து அருள் பெறுகின்றனர்.
ஹயக்ரீவர் பகவான் மாணவர்களுக்கு அருள்பாலிக்கிறார். புதன் தரிசனத்திற்கு விசேஷம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை நடத்தப்படும் சகஸ்ரநாம அர்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். மாதத்தின் ஒவ்வொரு மூலநட்சத்திரத்தன்று, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் ஹோமம் பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது.
Address: 75, Near Bustand, South Ukkadam, Coimbatore - 641001.
Phone: 0422-2307977
முகவரி: 75, பேருந்து நிலையம் அருகில், தெற்கு உக்கடம், கோயம்புத்தூர் - 641001.
தொலைபேசி எண்: 0422-2307977
மின்னஞ்சல்: kovailakshminarasimmar@gmail.com