அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010, கோயம்புத்தூர் மாவட்டம்.
Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010, Coimbatore District [TM009760].

Arulmigu Velliangiriandavar Temple

Poondi Vellingiri Andavar Temple in 5 and 1/2 kilometers seven hills in Girimalai Suyampu Lingam. It temple Special Thennkailayam.

Kongunadu excels in sovereignty and glory. The western boundary of Eshilvalar Kongu country is known as Vellimalai, Velliporuppu, Tenkailayam. As yogis see the Sivasodhi dance beyond the six sources, Velliangiri is the seventh mountain at the end of the six mountains.My lord Velliangiri has arisen as five lingams. Lakhs of people from all districts of Tamil Nadu and other states of the country come to worship these murthas in the summer months of Tai, Masi, Panguni and Chitrai (February, March, April, May).Arulmiku Poondi Vinayagar, Velliangiri Lord, Manonmani Amman Thirumeni were made to stand up at the foot of Velliangiri hill about a thousand years ago to make it easy for the disabled and women to worship and then built a stone temple.

அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில்

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் கிரிமலையானது 5 1/2 கிலோ மீட்டர் ஏழுமலைகளை கொண்ட சுயம்பு லிங்கமாக அமைந்துள்ளது, இதன் சிறப்பு தென்கைலாயம் என போற்றப்படுகிறது.பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலானது கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமா 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்திருக்கோயில் சட்டப்பிரிவு 46(111)-ன் கிழ் பட்டியலைச் சேர்ந்த முதல் நிலைத் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் முதல்நிலை செயல் அலுவலராலும், கோவை உதவி ஆணையர் அவர்கள் தக்காராகவும் இருந்து நிவாகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலின் பசலி 1431-ன் சகாயத் தொகை நிர்ணய வருமானம் ரூ.1,22,89,372/- ஆகும்.

1963-ம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட இத்திருக்கோயிலில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அருள்மிகு மனோன்மணியம்மை உடனம வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலும், வெள்ளியங்கிரி மலை மீது ஏழாவது மலையாகிய கிரிமலையில் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரும் குடிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். வருடத்தின் அனைத்து தினங்களிலும் மலையடி வாரத்தில் உள்ள திருக்கோயிலில் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

வெள்ளிமலை, தட்சிணயிலாயம், தென்கயிலை எனப்பெயர்கள் கொண்ட வெள்ளியங்கிரி சிவபெருமானின் திருஉருவாகவே போற்றப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் எப்போதும் தவம் செய்துவரும் உமையவள் வேண்டுதலின்படி சிவபெருமான் திருநடனம் புரிந்த வெள்ளியம்பலமே வெள்ளியங்கிரி ஆகும். இத்திருக்கோயிலின் உற்சவகாலமானது ஒவ்வொரு ஆஙடும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் முடிய நான்கு மாதங்கள் நடைபெறுகின்றது. இந்த நான்கு மாதகாலங்கள் தமிழ்நாட்டிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். வருகை தரும் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து சுமார் 5.4 கி.மீட்டர் தூரமும் 6000 அடி உயரமும் கொண்ட கிரிமலை சன்னிதானத்திற்கு சென்று திரும்புவார்கள். திருக்கோயில்அடிவாரத்தில் தங்கி வெகு விமர்சையாக அன்னதானமும் செய்து செல்வாகள்.

Temple View

Arulmigu Velliangiriandavar Temple

Address: Velliangiri Malai, Poondi, Coimbatore - 641114.

Phone: 0422-2615258

Email: poondivellingiri@gmai.com

அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில்

முகவரி: வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி, செசம்மேடு அஞ்சல், - 641114.

தொலைபேசி எண்: 0422-2615258

மின்னஞ்சல்: poondivellingiri@gmai.com

அருகிலுள்ள கோயில்கள்