அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010, கோயம்புத்தூர் மாவட்டம்.
Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010, Coimbatore District [TM009760].

Arulmigu Masaniamman Temple

In the Sangam Era, Anaimalai was known as Nannanur and was ruled by a chieftain called Nannan. There was a dense grove of mango trees belonging to him. Appointing check post officials, he had proclaimed punitive measures against trespassers. An unfortunate young woman who was bathing in the river Aliyar stumbles upon a mango fruit floating to her, Unable to resist the temptation, she picked it up and ate it. The guards caught the innocent woman and produced before the chieftain. She pleaded not guilty and prayed to the lord to set her free. She explained that she never committed any offence. Father of the woman offered to give an image made of gold equal to her weight by way of compensation together with 81 elephants, the ruler did not relent and ordered her execution. It was carried out and the body of the woman was buried in the near by graveyard. An image of hers was made in sand and people started worshiping it. The burial place becomes sacred and become a goddess with the name anaimalai masaniamman. A temple was built in the place and the temple became famous and many people started for coming to the temple. The goddess is considered powerful the wishes of her devotees are fulfilled by her.

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகரில், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் நன்னன் என்னும் மன்னன் ஆண்டு வந்த நன்னனூர் தற்போது ஆனைமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. நன்னனின் ஆளுகைக்குட்பட்ட உப்பாற்றங்கரையின் அருகே உள்ள அரசு தோட்டத்தில் வளர்ந்த மாமரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஆணையிடப்பட்டிருந்தது. ஒருநாள் ஆற்றில் தன் ஒத்த இளவயது பெண்களோடு நீராட வந்த ஒரு இளம்பெண் அந்த மாமரத்தில் இருந்து தானாகவே ஆற்றில் உதிர்ந்து வந்த மாங்கனியை உண்டுவிட்டதனை அறிந்த நன்னன் அப்பெண்ணை கொலை செய்துவிடும்படி உத்திரவிட்டதால், அவளது தந்தை தனது மகளின் எடையளவு தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தொரு ஆண் யானைகளையும் அறியாது செய்த தவறுக்கான தண்டம் செலுத்துவதாக கூறியும் அதனை ஏற்காமல் அப்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும், கொலையுண்ட அந்தப் பெண்ணை மயானத்தில் சமாதிபடுத்தி, அதன்மீது அந்தப் பெண் போன்ற ஒரு உருவத்தை அமைத்து மயானத்தில் சயனித்த நிலையில் இருந்த அந்தபெண் நாளடைவில் மாசாணி என்று அழைக்கப்பட்டு வழிபட்டு வரப்படுகிறது என செவிவழி செய்தி வாயிலாக அறிய வருகிறது.

Temple View

Arulmigu Masaniamman Temple

Address: Masaniamman Koil Street, Anaimalai, Coimbatore - 642104.

Phone: 0425-3282337

Email: masaniammantemple@gmail.com

அருள்மிகு ரங்கநாதசுவாமி கோயில்

முகவரி: மாசாணியம்மன் கோயில் தெரு, கோயம்புத்தூர் - 642104.

தொலைபேசி எண்: 0425-3282337

மின்னஞ்சல்: masaniammantemple@gmail.com

அருகிலுள்ள கோயில்கள்