Announcement:
அறிவிப்பு:
Once saint kachiappa’s son saint kalavamuni was in the search of pathi, pasu, pasam the sources of saivam. In his search he conculuded with pathi is the ultimate. For this he decided to worship lord siva in holy (sthalam) lands. While worshipping all the siva temples finally he reached athimapuri @ perur. In perur he stayed near the Kanchi river bed. He understood the wisdom about sivalinga will attain only in perur. So it took holy bath in the kanchi river and install the idol of lord siva. He dug an theertham and he used the same for abishegam. Then kalavamuni did dhapas towards lord siva for 10000 years in doing so lord siva appeaed before him and asked him `what he want`? in reply `what is the source for the attainment of soul`. Lord siva blessed the muni with answer for his question along with other spiritual gifts. Further lord siva stated that this place is known as Arasambalam herein also resolved his sin by seeing the performance of thandavam. Lord siva said further to muni that latter he will perform the thandavam in the velliammablam (silver) for lord bharama and for vishnu, you will attain salvation on seeing the above said thandavam. So the kalavamuni wanted to see the thandavam. By doing thapas, he saw the holy dance of Siva in the velliammabalam (silver) on pannkuni utharam day along with lord vishnu and bharama. On this occasion the kalavamuni got the soul salvation. So the temple which the kalavamuni worshipped is called as kalveswaram and the theertham is called as kalava theertham.
முன்பு ஒருமுறை காசியப்ப முனிவரின் புத்ரராகிய காலவமுனிவர் என்பவர்சிவண்ணியம் கைக்கூட்டி இருவினையொப்பும் மலபரிபாஉறமும் சத்திநிபாதமும் உற்று பதி பசு பாசம் ஆகியவற்றை தனதுமதி நுட்பத்தாலே ஆராய்ந்து பதியாகிய சிவபெருமானை அடைவதற்குரிய நெறி சிவலிங்க உபாசனையே என்று உணர்ந்தார். ஆதலால் சிவலிங்க பெருமானை சிறந்த தலத்தில் வழிபட வேண்டும் என்று விரும்பினார். சிவபெருமானை தலங்கள் தோறும் தரிசித்துக் கொண்டே கொங்கு நாட்டை அடைந்தர்ர். கொங்கு நாட்டிலே உள்ள பல சிவாலயங்களை தரிசித்து விட்டு கடைசியாக ஆதிமாபுரி எனும் பேரூரை வந்தடைந்தார். பேரூரில் காஞ்சி ஆற்றங்கரையில் தங்கினார். சிவலிங்க உபாசனை எளிதில் கை கூடுவதற்கு உரிய தலம் பேரூரே என்று உணர்ந்தார். காஞ்சி நதியில் ஸ்நானம் செய்து பட்டிப் பெருமானை தரிசனம் செய்து ஆ ற்றங்கரையில் சிவலிங்க ப்ரதிஷ்டை செய்தார். தீர்த்தம் ஒன்றையும் அகழ்ந்து அந்த ஜலத்தைக் கொண்டு தினந்தோறும் அப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை புரிந்து ஸ்ரீ பஞ்சாசர மந்திரத்தை பதினைந்தாயிரம் உரு ஜபித்து வந்தார். இங்ஙனம் பத்தாயிரம் வருஷம் தவம் செய்த பிறகு பூத கணங்களும் தேவ தேவனாகிய சிவபெருமான் காலவன் முன் தோன்றினார்.காலவ மகரிஷி இறைவனை ஸ்தோத்திரங்கள் பல செய்து துதித்து நின்றார். இறைவன் காலவனிரின் துணியை செவிமடுத்து பேரானந்தம் அடைந்து நீ விரும்பியது யாது என்று கேட்டு அருளினார். முனிவரும் இறைவனிடம் வீடுபேற்றினை அடையும் வழியினை உபதேசித்து அருள வேண்டும் என்று கேட்டார். சிவபெருமான் காலவ முனிவருக்கு தீஷை கொடுத்து வரங்கள் பல கொடுத்து மேலும் சித்தாந்த மஉறாவாக்யங்களை உபதேசித்து அருளினார். மேலும் இறைவன் இதுவே அரசம்பலம் இங்கே உன்னுடைய குற்றங்கள் அனைத்தையும் அழித்து பஞ்சக்ருத்ய பரமானந்த தாண்டவம் செய்கின்றோம். அது ஞானிகளுக்கு காணுதற்கு அரியதாம. பின்நாளில் ப்ரம்மா விஷ்ணுக்களுக்காக வெள்ளியம்பலத்தில் நடமாடுகின்றோம். அந்நடனத்தை வணங்கிடின் உன்னுடைய இவ்வுடல் அழிந்து வீடு பேற்றினை அடைவாய் என்று அருளி மறைந்தார். காலமுனிவர் வெள்ளியம்பல திருக்கூத்தையும் தரிசிக்க விரும்பியிருந்து தவஞ்செய்து பின்நாளில் ப்ரம்மாவிஷ்ணுக்களுடன் கூடி பங்குனி உத்தர ஆனந்த தாண்டவத்தை தரிசன செய்து வீடு பேற்றினை அடைந்தார். காலவமுனிவர் வழிபட்ட ஆலயத்திற்கு காலவேச்வாம் என்றும் தீத்த்தத்திற்கு காலவ தீர்த்தம் என்றும் பெயராயிற்று.
Address: Siruvani Main Road, Perur, Coimbatore - 641010.
Phone: 04222-607991
Email: patteesaperur@gmail.com
முகவரி: சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோயம்புத்தூர் - 641010.
தொலைபேசி எண்: 04222-607991
மின்னஞ்சல்: patteesaperur@gmail.com